மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன்.
இவங்க நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாங்க.
இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின், சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.
தற்போது, சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனுபமா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " என்னால் நடிக்க முடியாது என பலர் ட்ரோல் செய்தனர். அதை மீறி இயக்குநர் பிரவீன் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார்.
கடந்த ஆண்டு என் நடிப்பில் 'டிராகன்', 'தில்லுஸ்கொயர்' போன்ற படங்கள் வெற்றி அடைந்து என்னை உற்சாகப்படுத்தின. என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்" என்றும் தெரிவித்துள்ளார்.