பிரபல பிக்பாஸ் பிரபலம் காலமானார்! காரணம் இதுதான்


பிரபல நடிகையும், இந்தி பிக் பாஸ் 13வது சீசன் போட்டியாளருமான ஷெஃபாலி ஜரிவாலாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

‘காந்தா லகா’ உள்ளிட்ட படங்கள் மற்றும் இந்தி பிக் பாஸ் 13வது பங்கேற்றதற்காக அறியப்பட்டவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவருக்கு 42 வயது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 7) இரவு ஷெஃபாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது கணவர் பராக் தியாகி, மேலும் மூன்று பேருடன் சேர்ந்து, மும்பையின் அந்தேரியில் உள்ள பெல்லூவ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு ஷெஃபாலியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஷெபாலியின் மரணம் ரசிகர்களையும், சக நடிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.