திருமணம் செய்துகொண்ட ரவி மோகன்? திடீரென வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 ஆர்த்தியுடனான பிரிவையடுத்து ரவி மோகன், கெனீஷா என்ற பாடகியுடன் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து ஆர்த்தியும் ரவி மோகனும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், “இனி இவரும் சமூக வலைத்தளங்களிலோ ஊடகங்களிலோ ஒருவருக்கொருவர் மாறி மாறி  குற்றச்சாட்டுகள் வைக்கக்கூடாது” என உத்தரவிட்டது.


இந்த நிலையில் ரவி மோகனும் கெனிஷாவும் குன்றக்குடி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கே இருவரும் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவரும் முருகன் ஜோடியாக முருகன் கோவிலில் தரிசனம் செய்யச் சென்றுள்ளனரே தவிர திருமணம் செய்துகொள்ளவில்லை.