குட்டி நீச்சல் உடையில் பிக்பாஸ் ஜூலி.. பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 1 மூலம் பிரபலமான மரியா ஜூலியானா (ஜூலி), தற்போது ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த வெப் சீரிஸில், ஜூலி நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த செய்தி, இணையத்தில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பொது வெளியில் கவனம் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, சர்ச்சைகள் மற்றும் ட்ரோல்களுக்கு ஆளானவர்

பின்னர், விஜய் டிவியின் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து, மீண்டும் கவனத்தை ஈர்த்தார். தற்போது, இந்த வெப் சீரிஸ் மூலம் மற்றொரு தைரியமான முயற்சியில் இறங்கியுள்ளார். 


இந்த வெப் சீரிஸின் பெயர் மற்றும் OTT தளம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ஜூலி நீச்சல் உடையில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளது

ரசிகர்கள், “உடல் எடை கூடி, கொலுக்கு மொழுக்கு இருக்கும் ஜூலி நீச்சல் உடையில் நடிக்கிறாரா? இது எப்படி இருக்குமோ?” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஒரு தரப்பு, “ஜூலியின் தைரியமான முடிவு பாராட்டத்தக்கது,” என்று ஆதரவு தெரிவிக்க, மற்றொரு தரப்பு, “இது வெறும் கவன ஈர்ப்பு முயற்சியா?” என்று விமர்சித்து வருகிறது. 

ஜூலியின் இந்த புதிய முயற்சி, அவரது பிம்பத்தை மாற்றி, திரையுலகில் புதிய உயரங்களை அடைய உதவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.