நடிகை திரிஷாவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் எஸ்வி சேகர் குரல் எழுப்பி உள்ளார்.
திரிஷாவுக்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் பதிவிட்டு ஒருவர் கணவரை விட்டு வேறு ஒருவரை காதலிப்பது, கணவருடன் கோபித்துக் கொண்டு செல்வது, கள்ளக்காதலியாக நடிப்பது ஏனென்று கேள்வி எழுப்பினார்.
இது போன்ற கதாபாத்திரங்கள் தான் உங்களை தேடி வருகிறதா?
இல்லையென்றால் இதை நீங்கள் தேடிச் செல்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இந்தப் பதிவே டேக் செய்து நடிகர் எஸ்வி சேகர் வெளியிட்டுள்ள பதிவில் திரிஷா எப்படி நடிக்க வேண்டும் யாரோடு நடிக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லையென்றும் பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையென்றால் பார்க்காதீர்கள் என்று கூறி இருக்கிறார்.