2025 ஜூனில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படங்களுடன், “நீ சிரித்தால் நான் அதை விரும்புவேன், அந்த சிரிப்பு காரணம் நான் என்றால் அதை நேசிப்பேன்,” என்று கேப்ஷனிட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
2008-ல் ‘சேவல்’ படத்தில் இயக்குநர் ஹரி மூலம் தமிழுக்கு அறிமுகமான பூனம், ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தம்பிக்கோட்டை’, ‘ஆம்பள’, ‘அரண்மனை 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர், பின்னர் கவர்ச்சி பாத்திரங்களில் கவனம் ஈர்த்தார்.
சமீப ஆண்டுகளில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்கிறார். இந்த புகைப்படங்கள் ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்று வைரலாகின.
“பூனம் 39 வயதிலும் இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறார்,” என ஒரு தரப்பு பாராட்ட, “இது விளம்பரத்திற்காகவே,” என மற்றொரு தரப்பு விமர்சிக்கிறது.