நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் பாப்புலர் நடிகை. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
தற்போது அவர் தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்து இருக்கிறார். அவர் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்து இருக்கிறார்.
திருமணம் செய்யாதது பற்றி
தான் 37வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாதது பற்றி பேசி இருக்கிறார்.
ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தோல்வி அடைந்தவராக பார்கிறார்கள். தங்களின் காதலை தேடி பிடித்து திருமணம் செய்துகொள்வது எல்லோருக்கும் ஈஸி இல்லை.
எனக்கு திருமணம் நடந்தால் சந்தோசம், இல்லை என்றால் அதை விட சந்தோசம் என நித்யா மேனன் கூறி இருக்கிறார்.