வாரத்தில 7 முறை பண்றேன்.. ஆனால், பிரியங்காவுக்கு என்னை விட அது பெருசு.. சீரியல் நடிகை ஒப்பன்!

 


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை சுஜிதா தனுஷ், தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்று, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இந்த சீசன் செப்டம்பர் 29, 2024 அன்று முடிவடைந்த நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றியாளராகவும், சுஜிதா இரண்டாம் இடமாகவும் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், சுஜிதா அளித்த பேட்டியொன்றில், பிரியங்காவை புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.சுஜிதா தனது பேட்டியில், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிக உழைப்பை வெளிப்படுத்துபவர் என்றால், அது பிரியங்கா தான். 

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிஸியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற கடுமையாக உழைக்கிறார். நான் சீரியல் முடிந்து, குடும்பத்தையும் குழந்தையையும் கவனித்து வருகிறேன். வருமானத்திற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். 

ஆனால், பிரியங்காவுக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. இருந்தாலும், அங்கீகாரத்திற்காக அவர் கடினமாக உழைக்கிறார்,” என்று கூறினார்.

என்னுடைய வீட்டில், நான் ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் 7 முறை சமைக்கிறேன். ஆனால், பிரியங்காவுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. எனவே, கஷ்டம் என்னை விட அவங்களுக்கு 10 மடங்கு பெருசு. 

எந்த இடத்தையும் உற்சாகமாக மாற்றுவதில் பிரியங்கா திறமையானவர். அதனால், அவரை எனக்கு மிகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த சுஜிதா, குக் வித் கோமாளி சீசன் 5 இல் பங்கேற்று, பல வாரங்கள் ‘செஃப் ஆஃப் தி வீக்’ பட்டத்தை வென்றவர். 

ஆனால், பிரியங்காவின் வெற்றி அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் தொகுப்பாளர் மணிமேகலையின் வெளியேற்றத்திற்கு பிரியங்காவின் ஆதிக்கமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

சுஜிதாவின் இந்த புகழாரம், பிரியங்காவிற்கு ஆதரவாக இருந்தாலும், மணிமேகலையின் ஆதரவாளர்களிடையே விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. ரசிகர்கள், “சுஜிதாவின் கருத்து பிரியங்காவின் உழைப்பை பாராட்டினாலும், மணிமேகலையின் தன்மான பிரச்சனையை கவனிக்கவில்லை,” என்று கூறி விவாதிக்கின்றனர்