நமிதாவின் போதை உலகம்; நடிகரின் தீராத ஆசை; சீரழிந்து போன சினிமா..

 


மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், Kingwoods யூட்யூப் சேனலில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகைன் விவகாரம் மற்றும் அதன் அரசியல் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். 


இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு பணப் பரிவர்த்தனை, போதைப்பொருள் விநியோகம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் கலவையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பாண்டியனின் கூற்றுப்படி, சென்னை ஈசிஆரில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப் பரிவர்த்தனை இந்த விவகாரத்தின் மையமாக உள்ளது. இந்த நிலத்தை வாங்கியவர்கள் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், விற்பவர்கள் அதிமுகவைச் சேர்ந்த புதிய ராஜ்யசபா உறுப்பினர் தனபால் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இந்தப் பரிவர்த்தனையில் ஒரு கோடி ரூபாய் கமிஷனாக அஜய் வாண்டையார் குழு பெற்றதாகவும், இதில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு நெருக்கமான பிரசாத் என்ற நபர் முக்கிய பங்கு வகித்ததாகவும் பாண்டியன் குறிப்பிட்டார்.


அஜய் வாண்டையார் கைது, ஆளும் கட்சியின் செல்வாக்கு மற்றும் அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் நடந்ததாக பாண்டியன் சுட்டிக்காட்டினார். "ஆளுங்கட்சி செல்வாக்கு இல்லாமல் காவல்துறை இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்காது," என்று அவர் கூறினார். 


மேலும், இந்த விவகாரத்தில் பிரசாத் என்ற நபர் கோகைன் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், அவரது கூற்றுப்படி, கோகைன் விற்பனை அவரது "பகுதி நேர தொழிலாக" இருந்ததாகவும் தெரிவித்தார். 


இந்த கோகைன் வியாபாரம், சென்னை ஈசிஆரில் நடைபெறும் பிரபல நடிகர்-நடிகைகளின் பார்ட்டிகளுடன் தொடர்புடையது என்றும், இதில் பல லட்சம் ரூபாய் புழங்குவதாகவும் பாண்டியன் வெளிப்படுத்தினார்.


கோகைன் விவகாரம் திரைத்துறையில் ஆழமாகப் பரவியுள்ளதாகவும், இது கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை நீண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


"கோகைன் பயன்பாடு நடிகர்களுக்கு உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கருவியாக உள்ளது. இது 15 நாள் வரை உடலில் வீரியத்துடன் இருக்கும், மேலும் ரத்தப் பரிசோதனையில் 45 நாள் வரை கண்டறியப்படும்," என்று அவர் விளக்கினார். 


இந்தப் பழக்கம், சினிமா ஆசையில் வரும் இளம் பெண்களை பண்ணை வீடுகளுக்கு அழைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.இந்த விவகாரத்தில் காவல்துறையின் பங்கு குறித்து பாண்டியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால், 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். ஆனால், அரசியல் செல்வாக்கு காரணமாக, பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்," என்று அவர் தெரிவித்தார். 


மேலும், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் அரசியல் பின்னணி இல்லாததால் மாட்டிக்கொண்டதாகவும், பெரிய அரசியல் பின்னணி உள்ளவர்கள் தப்பித்து விடுவதாகவும் குறிப்பிட்டார்.இந்த வழக்கில், கோகைனை விற்பவர்கள் மற்றும் அதை இறக்குமதி செய்பவர்களை கண்டறிய வேண்டிய அவசியத்தை பாண்டியன் வலியுறுத்தினார். 


"ஸ்ரீகாந்த் ஒரு கன்ஸ்யூமர் மட்டுமே. அவருக்கு விற்றவர்கள் யார், அவர்களுக்கு சப்ளை செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால், இந்த வழக்கு ஸ்ரீகாந்துடன் தொடங்கி அவருடனே முடிகிறது," என்று அவர் கவலை தெரிவித்தார்.


அடுத்த அடுத்த சில கோலிவுட் பிரபலங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழில் விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை நமீதாவுக்கு இந்த போதை மருந்து வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், கூடிய விரைவில் நமீதாவுக்கு சமன் அனுப்பி விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுத்திகிறது. 


விசாரணைக்கு பின்னர் நமீதா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், நடிகைகளின் கட்டுப்பாட்டில் ஒரு போதை சாம்ராஜ்யமே இயங்கி வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றனர். இது பற்றி உறுதி படுத்தப்படாத, சில தகவலால் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தற்போது வரை தெரியவில்லை . 


இவர்களை தவிர இன்னும் பத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் போலீசாரின் கண்காணிப்பில் வந்துள்ளதாகவும், அவர்களை அடுத்தடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் தப்பிப்பதாகவும், காவல்துறையின் நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கத்துடன் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 


"சிடி மணி, டி.நகர் சத்யா, வேலுமணி, எடப்பாடி என ஒரு பெரிய நெட்வொர்க் இயங்குகிறது. இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளே முழு குற்றவாளிகள்," என்று பாண்டியன் கூறினார். 

இந்த விவகாரம், தமிழகத்தில் கோகைன் வியாபாரத்தின் ஆழமான அரசியல் மற்றும் திரைத்துறை தொடர்புகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை கண்டறிந்து, ஐரோப்பிய அல்லது அமெரிக்க பாணி விசாரணையின் மூலம் முழு வலைப்பின்னலை அழிக்க வேண்டும் என்று பாண்டியன் வலியுறுத்தினார். 


இந்த வழக்கு, அரசியல் செல்வாக்கு, காவல்துறையின் வரம்புகள் மற்றும் திரைத்துறையில் நிலவும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.