ரஜினிகாந்த் கேட்ட அந்த விஷயம் இதுவரை யாரும் கேட்டதில்லை.. ஓப்பினாக சொன்ன வனிதா

 


பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வனிதா தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி உள்ளார்


படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் வனிதா தற்போது ரஜினிகாந்த் குறித்து பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " ரஜினிகாந்த் என்னிடம் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் சொல் என்று கேட்டார். இதுவரை என் அப்பா கூட அது போன்று கேட்டதில்லை. இதன் மூலம் அவர் எந்த அளவிற்கு ஒரு அப்பாவியான நல்ல மனிதர் என்பதை நாம் அறியலாம்" என்று தெரிவித்துள்ளார்.