அந்த காட்சிகளுக்கு 'நோ'.. ஓப்பனாக சொன்ன நடிகை நிதி அகர்வால்

 


ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவர் பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரிஹர வீரமல்லு' படத்தில் நடித்துள்ளார்.


நிதி அகர்வால் ஓபன் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நிதி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " நான் மாஸ் ஹீரோயின் ஆக ஆசைப்படுகிறேன். இருப்பினும் லிப்லாக் காட்சியில், நீச்சல் உடை காட்சிகளில், முகம் சுளிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்.

நான் பெற்றோர்களுடன் அமர்ந்து என் படம் பார்க்க விரும்புகிறேன். நல்ல கதைகள், கேரக்டர் அமைந்தால் இது அனைத்தும் இல்லாமலும் ஜெயிக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.