தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் மீனா, மத்திய இணையமைச்சர் எல். முருகனுடன் தொடர்பில் இருப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வதந்தி, பொதுவெளியில் பரவலான விவாதங்களை உருவாக்கியது. திருச்சி சூர்யா, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதாக அறியப்படுபவர்.
இதனால், மீனாவுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்கள், “அவரது பதிவுகளுக்கு நம்பகத்தன்மை இல்லை, இவை வெறும் வதந்திகள்,” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு, இந்த வதந்திகளுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “என் அம்மா சொன்னார், ஒரு பெண்ணைப் பற்றி தவறான தகவல் வருகிறது என்றால், அதை உடனடியாக நம்பாதீர்கள். ஏனென்றால், அவளை வெல்ல முடியாதவர்கள், அவளை தோற்கடிக்க இத்தகைய வதந்திகளை ஆயுதமாக பயன்படுத்தலாம்.
இப்போது நான் அதை உணர்ந்திருக்கிறேன்,” என்று எழுதியுள்ளார். இந்த பதிவு, தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு எதிரான அவரது பதிலாகவே ரசிகர்களால் கருதப்படுகிறது.
மீனா, சமீபத்தில் இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார், இது அவர் பாஜகவில் இணையவுள்ளதாக வதந்திகளை தூண்டியது. இதற்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன், “மீனா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்,” என்று கூறியிருந்தார்.
ஆனால், திருச்சி சூர்யாவின் பதிவு இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்கியது. ரசிகர்கள், மீனாவின் இந்த பதிவை, தன்னைப் பற்றிய தவறான தகவல்களுக்கு எதிரான தைரியமான பதிலாக பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.