நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த ரோலாக இருந்தாலும் அதில் எதார்த்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்பவர்.
விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது கொண்டாடப்படும் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சினிமாவுக்கு வந்தது எதற்காக என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
பணத்திற்காக தான் வந்தேன்
தான் ஆரம்பகட்டத்தில் பணக்கஷ்டத்திற்காக பல்வேறு வேலைகளை செய்ததாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.
ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும்போது தான் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என தோன்றியதாகவும், அதற்கு பிறகு தான் நடிக்க வந்ததாகவும் விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.