பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா.. தயாரிப்பாளர் கொடுத்த ஷாக்

 


புகழ்பெற்ற சரித்திர கதைகளில் ஒன்று ராமாயணம். இதை வைத்து இதுவரை பல படங்கள் வெளிவந்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் கடந்த 2023ல் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றது என்பதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ராமாயணம் கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா.


திரைப்பட விளம்பரங்கள்

இப்படத்தை இயக்குநர் நிதேஷ் டிவாரி இயக்கி வருகிறார். ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார், சீதாவாக சாய் பல்லவி நடிக்க ராவணனாக யாஷ் நடிக்கிறார். உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் Hans Zimmer ஆகிய இருவரும் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர் இப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.


பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்

இந்த நிலையில், இரண்டு பாகங்களான உருவாகி வரும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி, ரூ. 1600 கோடி என தகவல் பரவி வந்த நிலையில், தயாரிப்பாளர் மல்ஹோத்ரா, ராமாயணா படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.

அதன்படி, மிக பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 4000 கோடி என தயாரிப்பாளர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவிலேயே மிகவும் விலைஉயர்ந்த தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவே ஆகும்.