சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. சொக்க வைக்கும் ஹரிப்பிரியா!

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹரிப்பிரியா
இவர் தற்போது குட்டையான ட்ரவுசர் அணிந்து, சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளன.ஹரிப்பிரியா, எதிர்நீச்சல் சீரியலில் தனது நகைச்சுவையும், சீரியஸான கதாபாத்திரமுமாக அனைவரையும் கவர்ந்தவர்.
இவர் முன்னதாக கனா காணும் காலங்கள், ப்ரியமானவளே, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹரிப்பிரியா, அவ்வப்போது தனது மாடர்ன் மற்றும் பாரம்பரிய உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பவர்.

தற்போது குட்டை ட்ரவுசரில், ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள், “இது சின்னத்திரை நடிகையா, சினிமா நடிகையா?” என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.