ஜெமினி படத்தின் மூலம் நம் கண்ணையும் மனதையும் குளிரவைத்த நடிகை கிரண் ரத்தோட். இன்ஸ்டாகிராமில் மூன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து கொண்டு காசு பார்த்து வருகிறார். இதனால், தனது ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கும் இவர், தற்போது மழைக்கு இதமாக கவர்ச்சி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் பாலில் ஊறவைத்த பன்னீர் போல இருந்தவர் தான் நடிகை கிரண். முதல் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல, திக்கி திக்கி தமிழ் பேசி நடித்திருந்தார். 2002ஆம் ஆண்டு ஜெமினி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் ஹிட்டானதால் கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.
அந்த படத்தை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தமிழ் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்ட கிரண் இந்தி, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது காதல் தோல்வியால் படத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனால் அவருக்கு படவாய்ப்பு குறைந்தது. இவர் ஹீரோயினாக விஜயகாந்துக்கு ஜோடியாக 'தென்னவன்' என்ற படத்தில் நடித்தார். அதன் பின் படவாய்ப்பு இல்லாததால், கவர்ச்சி நடிகையாக மாறி ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
தொடர்ந்து படவாய்ப்பை பெற இணையத்தில் கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.