பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் நடிகையாக பிரபலமாகி நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. போல்ட்டான காட்சிகளில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.
சமீபத்தில் நேஹா துபியாவின் Freedom to Feed என்ற நேர்காணலில் போது, தான் கர்ப்பமாக இருக்கும் போது நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதில், நான் கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இறுக்கமான ஆடையணிய வேண்டும் என்று தயாரிப்பாளர் வலியுறுத்தினார்.
அதனால், எனக்கு வலி மற்றும் அசெளகரியமான சூழல் ஏற்பட்டபோது மருத்துவரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் அப்படி இல்லை, அங்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார்.