இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும், நடிகை மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2016ல் வெளிவந்த தெறி படம் உலகளவில் ரூ. 150+ கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது.
.jpg)