மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம்

 


தமிழ் திரையுலகில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக போற்றப்படும் ‘ஆரண்ய காண்டம்’, 16 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

0

ஒரே நாளில் நடக்கும் பரபரப்பான கேங்க்ஸ்டர் மோதல்களை மையமாக கொண்ட இத்திரைப்படம், தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.


இந்நிலையில், ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் வரும் மார்ச் 13ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவுப்பு வெளியாகி உள்ளது.