மேடையில் சூர்யா செய்த செயல்.. விழுந்து விழுந்து சிரித்த மகள்!
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா நேற்று சீரும் சிறப்புமாக பல சிறப்பு விருந்தினர்களுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெற்றது. இப்படி இருக்கும்போது அகரம் முன்னாள் மாணவர் ஒருவர் தயாரித்த எலக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி இருந்தார். இப்படி இருக்கும்போது, அந்த எலக்ட்ரிக் பைக்கை சூர்யா ஓட்டியதைப் பார்த்த அவரது மகள் தியா விழுந்து விழுந்து சிரித்தார். அது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா சென்னையில் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி உதவி பெற்றவர்கள் தொடங்கி அகரத்திற்கு துணை நின்ற பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இப்போதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் இணையவாசிகளும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டி வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகரம் பவுண்டேஷன் மூலம் உருவான பொறியியல் பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அகரத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் அவர் தனது படிப்பு காலத்தின் போது உருவாக்கிய எலக்ட்ரிக் பைக் ஒன்றையும் மேடைக்கு கொண்டு வந்தார். பொறியியல் பட்டதாரிகளில் இருந்த ஒருவரது குழந்தைக்கு 'அ' என்று எழுதி அந்த குழந்தையின் படிப்பையும் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த மாணவர் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்கை சூர்யா மேடையில் ஓட்டினார். அப்போது அந்த எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய அகரத்தின் முன்னாள் மாணவரும் அமர்ந்து கொண்டார். சிரித்த தியா: இந்த காட்சிகளை பார்த்த சூர்யாவின் மகள் தியா விழுந்து விழுந்து சிரித்தார். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சூர்யா அந்த எலக்ட்ரிக் பைக் ஓட்டுவதை சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமார் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தார். பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற அகரம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவியது என்று எல்லாம் பேசினார்கள். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கார்த்தி பேசுகையில், சூர்யாவின் மகள் தியா மகன் தேவ் ஆகியோர் அகரத்தின் மாதம் 300 நன்கொடைத் திட்டத்தின் கீழ், தங்களது பாக்கெட் மணியை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள் என்று பேசி பாராட்டினார்.
மேலும் சூர்யா பணம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது, ஜோதிகா கூறிய வார்த்தைகள், பணத்தை வைத்தா இவற்றைத் தொடங்கினோம். அன்பைக் கொண்டு தானே? அன்பைக் கொண்டே முன்னேறுவோம், பணம் அதுவாக வந்து சேரும் என்று கூறியதாக கார்த்தி கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.