நண்பர்களுடன் பப் சென்று கூத்தாடிய நடிகை...மனநலப் பிரச்சினையா? தந்தை அளித்த புகார்


தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கல்பிகா கணேஷ், தமிழில் ‘பரோல்’ படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்ற இவர், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொருட்களைச் சேதப்படுத்தியதாக பப் நிர்வாகம் புகார் அளித்தது. இதனால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், இன்ஸ்டாகிராமில், தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம் பெண் ஒருவர், சைபராபாத் போலீசில் கல்பிகா மீது புகாரளித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்குச் சென்ற அவர், அங்குள்ள மெனு கார்டுகளை வீசி, ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மகள் மனநலப் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக அவருடைய தந்தை சங்கவர் கணேஷ், கச்சுபவுலி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், “கல்பிகா கடுமையான மனநலப் பிரச்சினையால் போராடி வருகிறார். அது அவருக்கும் தங்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டார். மன உளைச்சலால் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தவறாமல் 7 ஆண்டுகளாக சிவகார்த்திகேயன் செய்யும் அந்த விஷயம்! முகநூலில் பரப்பிய இயக்குனர்


நடிகர் சிவகார்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவாராக வலம் வருகிறார்.அவர் நடிப்பில் அடுத்து மதராஸி, பராசத்தி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

அந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு மீண்டும் பயிரிட உதவி வந்த நெல் ஜெயராமன் 2018ல் உடல்நல குறைவால் காலமானார். அப்போது அவரது இறுதி சடங்கிற்கான செலவு, அவரது மகனின் படிப்பு செலவு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்திகேயன் கூறி இருந்தார்.

சொன்ன சொல் தவறாமல் சிவகார்த்திகேயன் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறாராம். இந்த தகவலை இயக்குனர் இரா.சரவணன் முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.

மாரடைப்பால் இறந்தாரா பிரபாகரன்! பிரபலங்கள் அதிர்ச்சியில்.


நடிகர் பிரபாகரன் பனி விழும் மலர் வானம், காயம், கெட்டி மேளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன். இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்த பிரபாகரன், கடந்த ஏப்ரல் 10 ம் தேதி சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு வந்ததும், இரவு உறங்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினர் பிரபாகரனை பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோத்தித்து பார்த்த மருத்துவர்கள் நடிகர் பிரபாகரன் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். திடீர் மாரடைப்பால் இவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு தற்போது வயது 62. மறைந்த நடிகர் பிரபாகரனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் 10 வது படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.


இவருடைய மரணம் சின்னத்திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுடன் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.