ரஜினி படத்தில் வரவுள்ள கமலஹாசன்! தெறிக்க விடப்போகும் அதிரடி காட்சிகள்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமானத் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக கமலுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த வாரம் கமல் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு வந்த சோதனை! சற்றுமுன் வெளியான தகவல்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது.இந்நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் கூலி என்ற பெயரில் ஒரு படம் திரைக்கு வந்திருப்பதால் இந்த படத்தின் ஹிந்தி பதிப்புக்கு மஜ்தூர் என்று டைட்டில் வைத்திருந்தார்கள். 

ஆனால் இந்த டைட்டிலுக்கு சோசியல் மீடியாவில் ட்ரோல்கள் வெளியானதால் தற்போது கூலி படத்தின் ஹிந்தி பதிப்பின் டைட்டிலை மாற்றியுள்ளார்கள். தற்போது இந்த படத்திற்கு ‛கூலி தி பவர் ஹவுஸ்' என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

அது குறித்த போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.