நடிகை ஹன்சிகா விவாகரத்தா... இணையத்தில் வைரலாகும் தகவல்


நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையாக, நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் உலா வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செய்திகள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஹன்சிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் இவர்களுடைய பிரிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவு படுவைரலாகி வருகிறது.

இதில், இந்த வருடம் நான் கேட்காத ஒரு பாடம் கிடைத்துவிட்டது என ஹன்சிகா பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், விவாகரத்து குறித்துதான் மறைமுகமாக ஹன்சிகா இப்படி பதிவு செய்துள்ளார் என கூறி வருகிறார்கள்.

ஆனால், ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்த தமிழ் சினிமாவின் வெள்ளைத் தோல் நடிகை! வாயைப் பிளந்த ரசிகர்கள்


தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

 நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவரை ரசிகர்கள் வாயைப் பிளந்தவாறு பார்த்துள்ளனர்.