Ambika: விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அம்பிகா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா? இனி தான் சம்பவம் இருக்கு!



தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி ஹீரோயினாக கொடி கட்டி பறந்தவர் அம்பிகா. அழகும், நளினமான நடிப்பும் சேர்ந்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், சத்யராஜ் என அந்த காலத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அம்பிகா, குடும்ப கதைகள் முதல் கமர்ஷியல் ஹிட்ஸ் வரை பல்வேறு வகை படங்களில் நடித்தவர்.

திருமணத்திற்குப் பிறகும் முழுக்க விலகாமல், இடையிடையே படங்கள், பின்னர் சீரியல்கள் என தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து கொண்டு வந்தார். பெரிய திரையிலிருந்து சிறிய திரைக்கு வந்த பிறகும், "அம்பிகா வந்தா ஒரு கிளாஸ் இருக்கும்" என்ற மதிப்பு குறையவில்லை. இந்த நிலையில் இப்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிந்து பைரவியில் வக்கீல் அவதாரம்

இப்போது சிந்து பைரவி சீரியலில் அம்பிகா வக்கீலாக களம் இறங்கியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், சிந்துவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நின்று பேசும் லுக் - கருப்பு கோட், செம்ம கம்பீரம், கண்களில் அதே பழைய தீவிரம் - இவை எல்லாம் ரசிகர்களை மீண்டும் 80-களின் அம்பிகாவை நினைவூட்டுகிறது.

இன்றைய எபிசோடில் அவர் எடுத்த அந்த என்ட்ரி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "இந்த வழக்கை அம்பிகா ஜெயிச்சு காட்டுவாரா?" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.

ஆனால் சிந்துவின் செயல் சரியா?

இங்கே ஒரு பெரிய விவாதம் கிளம்பியிருக்கிறது. அதாவது இந்த சீரியலின் கதைப்படி கதாநாயகி சிந்துவை ஹீரோவின் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுவதற்காக ஏற்பாடுகள் பண்ணியிருக்கின்றனர். 

ஆனால் சிந்து நான் ஹீரோவை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று கல்யாணத்திற்கு முந்தின நாள் வீட்டில் இருந்து வெளியே போய் கோவிலில் தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு, எனக்கு தாலி கட்டியது ஹீரோ தான் என்று பொய் சொல்ல.. அதை உண்மை என்று குடும்பத்தினரும் நம்பி இவருக்கு ஹீரோவுடன் கல்யாணம் பண்ணி வைக்கின்றனர்.

 ஆனால் இப்போது அவர் செய்த பித்தலாட்டங்கள் எல்லாம் வெளியே வந்திருக்கிறது. இந்த நிலையில் சிந்து சார்பாக தான் இப்போது அம்பிகா இந்த சீரியலில் களம் இறங்குகிறார்.

சிந்து செய்த விஷயம் சரியா தவறா? ஒருவரை பிடித்திருக்கிறது. என்று பொய் பழி போட்டு, அவரை ஏமாற்றி கல்யாணம் செய்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தான். பொதுவாக சீரியல்களில் வில்லிகள் தான் இப்படிப்பட்ட பிளான்கள் போடுவார்கள். ஆனால் இந்த சீரியலில் கதாநாயகியே அந்த மாதிரி செய்கிறார் என்பது பலருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.

"இது சரி என்று காட்டப்படுகிறதா?" என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், கதாநாயகி செய்யும் விஷயத்தை சிலர் நியாயப்படுத்த ஆரம்பித்துவிடக்கூடும். அது ஒரு தவறான முன் உதாரணமாக மாறக்கூடாது என்பதே சிலரின் கருத்து.

சீரியலை சீரியலாக பார்ப்போம்

அதே நேரத்தில், இது ஒரு கற்பனைக்கதை. சீரியலை சீரியலாகவே பார்க்க வேண்டும்; ரியல் லைஃப்க்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதும் உண்மை. ட்ராமா, ட்விஸ்ட், சென்டிமெண்ட் - இவை இல்லாமல் சீரியல் ஓடாது. அதனால் கதை எங்கு செல்கிறது, சிந்துவின் தவறுக்கு என்ன விளைவு வரும், அம்பிகா வக்கீலாக என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதையே கவனிக்க வேண்டும்.

அம்பிகாவின் அனுபவம்

அம்பிகா ஒரு சாதாரண நடிகை அல்ல. நான்கு தசாப்தங்களாக திரை உலகில் இருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. 80-களில் க்ளாமர் ரோல்களும் செய்தவர், குடும்ப கதைகளில் கண்ணீர் வடிக்க வைத்தவரும் இவர் தான். இப்போது வக்கீலாக நீதிமன்றத்தில் நின்று பேசும் போது, அந்த அனுபவம் எல்லாம் சேர்ந்து ஒரு வித்தியாசமான எடை கொடுக்கிறது.

இந்த என்ட்ரி சீரியலுக்கு திருப்புமுனையாக அமையுமா? சிந்துவுக்கு உண்மையிலேயே நீதி கிடைக்குமா? அல்லது சிந்துவின் தவறு வெளிச்சத்துக்கு வந்து கதை வேறு திசைக்கு போகுமா?

எதுவாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் உறுதி - அம்பிகா வந்த பிறகு 'சிந்து பைரவி' சீரியல் இன்னும் ஒரு லெவல் எட்டியுள்ளது என்று ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

முடிவில் ஒரு சின்ன அட்வைஸ்: சீரியல் பார்க்கலாம், விவாதிக்கலாம்... ஆனால் அதை வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கதை வேறு, நிஜம் வேறு!

விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் திரிஷா செய்த வேலை.. பயில்வான் ரங்கநாதன் விளாசல்!


விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படும் நிலையில், இதுகுறித்து நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் போது விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் பயணம் செய்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு கோவாவிற்கும் இருவரும் சென்றதாகவும் கூறினார். 

மேலும், சமீபத்தில் உதய்பூர் அரண்மனையில் நடைபெற்றதாக கூறப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண நிகழ்ச்சிக்கும் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் புகைப்படங்கள் வெளியே வரவில்லை என்றும், இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா விஜய்யுடன் எடுத்த செல்பியை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

 ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில் அந்த புகைப்படம் வெளியானது மேலும் விவாதங்களை தூண்டியதாக அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், "இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சிலர் இதற்கு அரசியல் காரணங்களை சொல்வது சரியானது அல்ல. இந்த விவகாரம் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விஷயம்.

 இதனால் அவரின் புகழ் ஒரு அளவுக்கு பாதிக்கப்படலாம், ஆனால் அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு குறைவு" என்றும் அவர் கூறினார்.

இதேபோல், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை விஜய் தான் எடுக்க வேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமரசமாக தீர்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது விஜய்யின் முடிவில்தான் இருக்கிறது என்றும், சரியான முடிவு எடுக்கப்பட்டால் தற்போது நிலவி வரும் விவாதங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்தார்

சங்கீதாவின் உண்மையான முகமே இதுதான்! உதவி செய்தவருக்கு வைத்த ஆப்பு.. விஜயின் முன்னாள் உதவியாளர் ஓபன்



தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ( Vijay Again Controversy ) குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அவரது முன்னாள் உதவியாளராக இருந்த டி.ஆர். ரமேஷ், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக மனைவி சங்கீதா பற்றியும் பல கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

விஜய்-சங்கீதா காதல் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கு புதிய விஷயம் அல்ல. ரசிகையாக இருந்த சங்கீதா, பின்னர் விஜயை காதலித்து, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

 பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த தம்பதியரைச் சுற்றி சமீபத்தில் விவாகரத்து வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக, சங்கீதா விஜய் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், பல தரப்பிலிருந்து கருத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

இந்த நிலையில், டி.ஆர். ரமேஷ் கூறிய சில தகவல்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது பேட்டியில், சங்கீதா விஜய்க்கு நெருக்கமானது அவருடன் பல வருடங்களாக இருந்த உதவியாளர் ராஜன் மூலமாகத்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

 "ஆரம்பத்தில் ராஜன் தான் இப்படிப்பட்ட பெண் நல்லவர், நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விஜயிடம் பேசியவர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்த ராஜனையே வீட்டிலிருந்து விலக்கி வைத்தது சங்கீதாதான்" என்று அவர் கூறியுள்ளார். 

இதன் மூலம் சங்கீதாவின் குணநலன் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது முதல் சர்ச்சை அல்ல. சில மாதங்களுக்கு முன் டி.ஆர். ரமேஷ் மற்றொரு பேட்டியில், தாம் விஜயிடம் உதவியாளராக இருந்தபோது நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தார். 

ஒரு நாள் விஜய் மிகவும் கோபமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். 

நான் அவருக்கு சாப்பாடு பரிமாறும் போது, சாப்பாட்டில் ஒரு முடி இருந்ததற்காக என்னை எட்டி மிதித்து கீழே தள்ளிவிட்டார்.

 அதற்காக மறுநாளும் மன்னிப்பு கேட்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.

மேலும், தன்னுடைய மகள் திருமணத்திற்கு விஜயை அழைத்தபோது, பல வருடங்களாக அவரிடம் உதவியாளராக வேலை பார்த்த போதும், 2000 ரூபாய் மட்டும் மொய் கொடுக்க சொல்லியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த தகவல்கள் அப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்கிடையில், விஜய் சமீப காலமாக அரசியல் தளத்திலும் அதிக கவனம் பெற்றுள்ளார். தனது அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. குடும்ப விவகாரம், தனிப்பட்ட குற்றச்சாட்டு, அரசியல் விமர்சனம்-இவை அனைத்தும் ஒரே நேரத்தில் விஜயைச் சுற்றி சுழல்கின்றன.

சங்கீதா தொடர்பான வழக்கு குறித்து இதுவரை விஜய் தரப்பிலோ, சங்கீதா தரப்பிலோ விரிவான விளக்கம் வெளியாகவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் மற்றும் ஆதரவு-எதிர்ப்பு கருத்துகள் தொடர்ந்து பரவி வருகின்றன.

அடுத்த ஜென்மம் இருந்தால் இது நடக்கணும்னு ஆசை.. பொதுவெளியில் போட்டுடைத்த விஜய்.!!


Thanjavur செங்கிப்பட்டி கூட்டத்தில் விவசாயிகளின் நலன் குறித்துப் பேசிய தவெக தலைவர் விஜய், நெகிழ்ச்சியான ஒரு கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

எனக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், ஒரு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்” என்று அவர் கூறியது அங்கிருந்த டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவராகத் தன்னை முன்னிறுத்திய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் என்பதையும் உணர்த்தினார்.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய விஜய், அவர்கள் படும் இன்னல்களைத் தான் அறிவதாகவும், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். 

ஏற்கனவே “திமுக ஒரு தீய சக்தி” என அரசியல் அனலைக் கிளப்பியவர், இந்த “விவசாயக் குடும்பம்” குறித்த பேச்சின் மூலம் டெல்டா மக்களின் மனங்களை வெல்லும் உணர்வுப்பூர்வமான முயற்சியை மேற்கொண்டார்.

 விஜய்யின் இந்த விருப்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லீவு வேணும்னா என்னோடு உடலுறவு வைக்கணும்" என்னை மச்சான்னு கூப்பிடு. பெண் காவலருக்கு அதிகாரி கொடுத்த பாலியல் டார்ச்சர். கண்ணீர் மல்கப் புகார்..!!


UP - மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பணியாற்றும் பெண் காவலர் மேனகா சௌகான், தனது காவல் நிலைய அதிகாரியான (SO) தினேஷ் சந்திர சௌத்ரி மீது மிகக் கடுமையான புகார்களை முன்வைத்துள்ளார்.

 உடல்நலம் குன்றியிருக்கும் தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கோரியபோது, அதற்குப் பதிலாக அந்த அதிகாரி பாலியல் ரீதியான நிபந்தனைகளை விதித்ததாக மேனகா குற்றம் சாட்டியுள்ளார்.

விடுப்பு வழங்க வேண்டுமானால் தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என அந்த அதிகாரி வற்புறுத்தியதாகவும், தனிப்பட்ட தொலைபேசி எண்ணில் அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் மேனகா தெரிவித்துள்ளார்.

 மேலும், தன்னை ‘மச்சான்’ என்று அழைக்குமாறு கூறி அந்த அதிகாரி தொடர்ந்து மனரீதியான அழுத்தத்தை அளித்ததுடன், பலமுறை பாலியல் அத்துமீறல்களிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

சட்டத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியே, சக பெண் காவலரிடம் இத்தகைய இழிவான முறையில் நடந்துகொண்டது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீருடை அணிந்த ஒரு பெண் காவலருக்கே இந்த நிலை என்றால், சாதாரண எளிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தி, குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அடுத்த பரபரப்பு.! குழந்தைகள் முன் சங்கீதாவிடம் விஜய் அப்படி நடந்துக்குவார். விஜய் பற்றி சுசித்ரா சொன்ன 'ஷாக்' தகவல்கள்.!!



பாடகியும் சர்ச்சைக்குரிய விமர்சகருமான சுசித்ரா, நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

விஜய் தனது மனைவி சங்கீதாவை குழந்தைகள் முன்னிலையிலேயே பலமுறை அடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், விஜய்யின் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் மற்றும் சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விஜய்க்குப் பல சபலங்கள் இருப்பதாகவும், ஆனால் தன் மனைவியின் மீது கை வைக்கும் அளவிற்கு அவர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். 

விஜய்யின் இந்தச் செயல் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், விஜய் தனது குடும்பத்தின் மீதான நேர்மையை (Loyalty) ஏற்கனவே இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கிடையேயான அன்பு எப்போதோ மறைந்துவிட்டதாகவும் சுசித்ரா சாடியுள்ளார். 

அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், சுசித்ராவின் இந்தத் தனிப்பட்டத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?



 நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். 

மேலும் தனக்கு ஜீவனாம்ச தொகையை வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.

இந்நிலையில், விஜய் - சங்கீதா திருமண விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சங்கீதாவுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் ஜீவனாசம்சமாக சங்கீதாவுக்கு விஜய் எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டும் என்ற விடயம் குறித்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர். 

ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர்.

இந்த விடயம் இணையத்தில் பெரும் அதிவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், விவாகரத்து வழக்கு சங்கீதாவுக்கு சாதகமாக வந்தால், விஜய் எத்தனை கோடியை சங்கீதாவுக்கு ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டி இருக்கும் என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

விஜய் தனது சொத்துகளில் 50 சதவீத தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டியிருக்குமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. 

இந்திய , ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - பிரமிளா ஸ்ரீனிவாசன் விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ரூ.15,000 கோடி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 இந்தியாவின் மிக உயர்ந்த விவாகரத்து ஜீவனாம்ச தொகையாக இது அறியப்படுகின்றது. 

பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் தனது மனைவியை விவாகராத்து செய்ததில் ரூ.380 கோடியை ஜீவனாம்சமாக கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தகவல்களின் அடிப்படையில், நடிகர் விஜயின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடிக்கும் மேல் இருக்கும்.இந்நிலையில் இவர் விவாகரத்து உறுதியானால் 50 சதவீத தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டுமா? என்று கேட்டால் இதற்கு நேரடியாக பதில் கொடுத்துவிட முடியாது.

காரணம் இந்தியாவை பொருத்தமட்டில் மனைவியை விவாகரத்து செய்தால், கணவரின் சொத்தில் 50% மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்த்தில் குறிப்பிடப்படவில்லை.

1995-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு முன்பு ஒருவருக்குச் சொந்தமான சொத்து அல்லது அவரது பெயரில் வாங்கப்பட்ட சொத்து அவருக்குச் சொந்தமானது என்கிறது.

நீதிமன்றி விசாரணைகளில் யார் எவ்வளவு சம்பாதித்தார்கள்? வீட்டை யார் நிர்வகித்தார்கள்? குழந்தைகளின் தேவைகள் என்ன? வாழ்க்கை முறை செலவு எப்படிபட்டது? போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

 எனவே இந்த வழக்கிலும் இத்தனைய விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த விடயத்தில் சங்கீதா ஜீவனாம்சமாக எவ்வளவு கேட்கின்றார் என்பதை உறுதிசெய்த பின்னும் முறையான நீதிமன்ற விசாரணைகளின் "நியாயமான மற்றும் பொருத்தமான" தொகையை நிர்ணயிக்க முடியும். இந்த விதிகள் ஒவ்வொரு வழக்குக்கும் மாறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்த புடவையின் விலை என்ன தெரியுமா?

 


தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நட்சத்திர ஜோகளில் டாப்பில் இருப்பவர்கள் தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் என்ற படத்தில் முதன்முறையாக இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுக்கு அந்த படம் செம ஹிட் கொடுத்தது. 

அப்படம் செம ஹிட்டடிக்க மீண்டும் இருவரும் Dear Comrade படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

அதன்பின் இருவரும் ஒன்றாக பல இடங்களில் காணப்பட ரசிகர்கள் இவர்கள் காதலிக்கிறார்கள் என கூறி வந்தனர், ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்து ஒரு அறிவிப்பும் வந்தது இல்லை

கடந்த சில வாரங்களாக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மற்தனா இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என சமூக வலைதளங்களில் நிறைய செய்திகள் வந்தாலும் அவர்கள் வாய் திறக்காமல் இருந்தனர்

திருமண ஏற்பாடுகளை எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அமைதியாக செய்து வந்தனர்.

 திருமணத்திற்கு சில தினங்கள் முன்பு தான் திருமணம் பற்றி அறிவித்தார். 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.

 தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்தின் போது அணிந்த புடவையின் விலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வலம் வருகிறது.

திருமணத்தில் அணிந்துவந்த பாரம்பரிய திருமண புடவையின் விலை ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்குமாம். மொத்த அலங்கார செலவு ரூ. 8 முதல் ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா..

 


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் உதய்பூர் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக சில தினங்கள் முன்பு நடந்து முடிந்தது.

வரும் மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அழைப்பு பெறப்பட்டவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்றும், வேறு யாரும் வர வேண்டாம், அனுமதி இல்லை என அறிவித்து இருக்கின்றனர்.

திருமணம் முடிந்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக புது வீட்டில் குடியேற இருக்கிறார்களாம்.

அந்த வீடு திருமண கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதோ பாருங்க.

நடிகை தேவதர்ஷினி மகளா இது.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

 


பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள் நியதி 96 படத்திலேயே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சமீபத்தில் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். அதற்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

இந்நிலையில் நியதி ட்ரெண்டி லுக்கில் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

கார் முன் நின்று போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ பாருங்க.

விஜய்காக பாடியதால் இப்படி செய்வீங்களா..

 



நடிகர் விஜய்யின் கட்சி நிகழ்ச்சியில் சென்று பாடியபோது பாடகர் வேல்முருகன் உடன் விஜய் இணைந்து நடனம் ஆடி இருந்த வீடியோ வைரல் ஆகி இருந்தது.

அதற்கு பிறகு முருகன் பாடலை அவமதித்துவிட்டார் என வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் காட்டமாக பேசி இருக்கிறார்.

பாடுனதுக்கு எல்லாம் கேஸ் போடுவாங்களா என அப்போது நான் நினைத்தேன். சிலர் தங்கள் எண்ணம் போல பேசினார்கள். நான் இரண்டு நாள் அறையை விட்டே வெளியில் வரவில்லை.

பெரிய கச்சேரிக்கு போனால் பாடவே பயமாக இருக்கு. நான் எந்த காட்சியிலும் இல்லை. நான் எல்லாருக்கும் பொதுவானவன்.

ஒருத்தன் நல்லா இருக்க கூடாது, அப்படி இருந்தால் எதாவது செய்யணும் என செய்கிறார்கள். உடன் இருந்த என் பெண் குழந்தை என்று கூட பார்க்காமல் அப்படி பேசுகிறார்கள் என காட்டமாக பேசி இருக்கிறார் வேல்முருகன்.

ஹாட் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஷூட்

 


நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் கூலி படத்தில் ரஜினி உடன் நடித்து இருந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். 

அவர் தற்போது சளார் 2ம் பாகம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் ஹாட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். 

அப்பாவை Unfollow செய்தாரா விஜய் மகன்?

 


நடிகர் விஜயின் மகன் யேஜப் சஞ்சய் அவருடைய அம்மாவிற்கு முழு ஆதரவாக செய்த செயல் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

கிரகலங்களுக்குள் ஒரு பிரச்சனை நடந்து விட்டால் அதை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவார்கள். குறிப்பாக பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களின் செயலை எப்போதும் கவனித்துகொண்டே இருப்பார்கள்.

இந்த நிலையில் தான் நடிகர் விஜய் நடிப்பை விட்டு தற்போது அரசியலில் இறங்கி உள்ளார். அப்படி இருக்கையில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பலவி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சங்கீதா அதாவது விஜய் மனைவி குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்து ஏப்ரல் 20 தாம் திகதி மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் மகன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை அன்போலோவ் செய்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் தனது தந்தையை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. 

சிலர் கூறுகின்றனர் ஏற்கனவே ஜோசப் தன்னுடைய தந்தையான விஜயை பின்தொடரவில்லை. 

அவர் இப்போது தான் தொடர்வதை நிறுத்தி விட்டார் என யார் சொன்னது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 இதில் உண்மையில் சஞ்சய் Unfollow செய்தாரா இல்லை முதலில் இருந்து follow பண்ணவில்லையா என்பது சஞ்சய் சொன்னால் மட்டுமே தெரியும்.