எதிர்நீச்சல் 2 சீரியலில் அரசி கதிர் ஆட்டம் கிளோஸ்...


சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியல் கொஞ்சம் டல் அடித்த நிலையில் தற்போது சூடு பிடிக்கும் அளவிற்கு சில கேரக்டர்கள் ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த வகையில் வாசு, குந்தவை, கொற்றவை என்ட்ரி மாஸாக அமைந்திருக்கிறது. அதிலும் கொற்றவை வந்த பிறகு தான் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடியாக ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார்.

அந்த வகையில் குடும்ப டாக்டர் மாதிரி குடும்ப போலீஸ் என்ற கான்செப்டில் ஜனனி கொடுத்த கம்ப்ளைன்ட் விசாரிப்பதற்காக குணசேகரன் வீட்டிற்கு சென்று அராஜகம் பண்ணிய அனைவரது கண்ணிலும் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு அதிரடி காட்டி விட்டார். ஓவராக துள்ளிக் கொண்டிருந்த கதிரையும் அடக்கி அங்கிருந்து தர்ஷனை குண்டுகட்டாக தூக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்.

இதுவரை தர்ஷனும், அப்பா மற்றும் அறிவுக்கரசியின் ஆள் பலமும் பணப்பலமும் இருக்கு என்ற திமிரில் குதித்து வந்தவனுக்கு சரியான பதிலடியாக அமைந்திருக்கிறது. பார்க்கவி கோபத்தில் எல்லா மெசேஜ்களையும் டெலிட் பண்ணி இருந்தாலும் அதை கண்டுபிடிக்கும் விதமாக கொற்றவை எல்லாத்தையும் ஆதாரத்துடன் கொண்டு வந்து விட்டார்.

அதனால் தர்ஷன் இனி வசமாக சிக்கிவிட்டார் என்பதற்கேற்ப லாக் ஆகிவிட்டார். தர்ஷனை எப்படியாவது இந்த பிரச்சனையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று அறிவுக்கரசி மற்றும் கதிர் ஒரு பக்கம் குறுக்கு வழியில் போக பார்க்கிறார்கள். ஆனால் குற்றவை இருக்கும் வரை அரசி கதிர் ஆட்டம் கிளோஸ் தான்.

அடுத்ததாக குணசேகருக்கு ஆப்பு என்னவென்றால், குழந்தைகளை வைத்து மருமகளுக்கு செக் வைக்கணும் என்று நினைத்திருந்தார். ஆனால் அதே குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொள்ள சட்ட ரீதியாக எல்லா உரிமையும் இருக்கிறது என்பதால் அடுத்த வழி குழந்தைகளை தன்னுடன் கூட்டிக்கொண்டு வைக்கலாம் என்பதுதான். இதுவரை குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டு டார்ச்சர் அனுப்பி வைத்து வந்த பிள்ளைகளுக்கும் இனி விடிவு காலம் பிறக்கப் போகிறது.

அடுத்து சாருபாலா மூலம் பெண் குழந்தைகளை அம்மாவிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று கேஸ் போட்டு தாரா ஐஸ்வர்யாவை ரேணுகா மற்றும் நந்தினி கூட்டிக் கொள்வார்கள். இனி குணசேகரன் கூட்டத்திற்கு விழப்போகும் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கப்போகிறது.



சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு!


ஜனனி அசோக், ரிச்சர்ட் லீட் ரோல்ல நடிக்க ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் இதயம்.

கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 650 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தொடர் முடிவை எட்டவுள்ள நிலையில் தொடரில் இருந்து நடிகை ஜனனி அசோக்குமார் விலகுவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதயம் 2ம் பாகத்தில் நடிக்க இருப்பவர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஜனனி அசோக் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதில் 2ம் பாகத்தில் Nindu Noorella Savaasam சீரியல் புகழ் பல்லவி கௌடா புதிய நாயகியாக 2ம் பாகத்தில் நடிக்கிறார்.

இவரை தாண்டி பரீனா, ஸ்ரீபிரியா, விட்டல், மனுஷ் என பலர் நடிக்க கமிட்டாகியுள்ளனர். 



விரைவில் முடியவுள்ள ஹிட் சீரியல்!


சன் டிவி தொடர்களுக்கு போட்டியாக விஜய் தொலைக்காட்சியிலும் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.

இப்படி ரசிகர்கள் வரவேற்கும் வண்ணம் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாக ஒரு தொடர் முடிவுக்கு வரப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த வருடம் ஜுன் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய பனிவிழும் மலர்வனம் சீரியல் தான் முடிவுக்கு வரப்போகிறதாம்.

தற்போது அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால் அத் தொடரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.