அதை முறுக்கி விட்டு திரையில் மிரட்ட தயாராகும் சிவகார்த்திகேயன்! எந்த படத்துல தெரியுமா?


சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. க்ளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன் போலீஸ் போல அந்த கெட்டப்பில் இருக்கின்றார். இதை வைத்து இந்த கெட்டப் சிவகார்த்திகேயன் மதராஸி படத்திற்காக தான் போட்டுள்ளார் என பேசி வருகின்றனர்

சிவகார்த்திகேயன் தற்போது தான் மதராஸி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளதாம். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முறுக்கு மீசை கெட்டப்பில் சிவகார்த்திகேயன் செம மிரட்டலாக இருக்கின்றார். 

மேலும் அவர் மதராஸி படத்திற்காக தான் இந்த லுக்கிற்கு மாறியிருக்கிறார் என சொல்லப்படுகின்றது. 

ஏற்கனவே வெளியான மதராஸி பட போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோக்களில் சிவகார்த்திகேயன் தாடி மீசை உடன் இருக்கும் கெட்டப்பில் தான் இருந்தார். மேலும் சமீபத்தில் நாயகி ருக்மிணி வசந்த் கூட மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் ஹைலைட்டாக இருக்கும் என கூறியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு

 அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் பராசக்தி.

நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு,

தமிழ்நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, அடுத்த வாரம் படக்குழு இலங்கை செல்கின்றனர். அங்கு, யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.