கூலி திரைப்படம் தொடர்பில் வெளியான அசத்தலான அப்டேட்!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஹைதராபாத் பாங்காக் உள்ளிட்டப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமான கூலியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 

சௌபின் ஷாயிர், நாகார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பின்படி மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கூலி திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதிஹாசன்

 ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.


 ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கூலி படப்பிடிப்பிற்காக இன்று சென்னை வந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.