தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலித்ததாக முன்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டது. சென்னையில் த்ரிஷா வீட்டு முகவரி மட்டும் தான் தெரியும் என ராணா கூட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இருவரும் சின்சியராக காதலிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சாக கிடந்தது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.த்ரிஷாவோ இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ராணாவோ மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.த்ரிஷாவுக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை.
அதனால் அவசரப்பட்டு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்ற வாசலை மிதிக்க அவர் தயாராக இல்லை. அதனால் தன்னை மாறச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபருக்காக காத்திருக்கிறார் த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷாவை காதலித்ததை ராணா ஒரு முறை ஒப்புக் கொண்டது பற்றி தற்போது பேசப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்பு கலந்து கொண்ட ராணா த்ரிஷா பற்றி கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார்.
த்ரிஷாவை காதலித்ததாக பேசப்பட்டபோதும் சரி, பிரேக்கப் ஆன போதும் சரி அது பற்றி பேசாத ராணா, கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாத த்ரிஷாவோ ராணா விவகாரம் பற்றி பேசியதே இல்லை.
இந்நிலையில் சிம்புவும் சிங்கிளாக இருக்கிறார், த்ரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இருவருக்குமே விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.