இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான புஷ்பா 2 நடிகருக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜூன் ரூ.300 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார். இது விஜய், அஜித், ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். விஜய் ஜன நாயகன் படத்திற்கு ரூ.275 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லீ படத்திற்கு அஜித்திற்கு ரூ.110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திற்கு அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூனுக்கு இனி அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு படம் கூட திரைக்கு வராமல் போகலாம். எனினும், அதிக வசூல் குவிக்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார். வேறு எந்த நடிகர்களையும் விட அதிகமாக வசூல் குவித்து வருகிறார். அவரது புஷ்பா 2 படம் உலகளவில் ரூ.1740 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.1469 கோடி வரையில் வசூல் குவித்தது. இதற்கு முன்னதாக ஷாருக்கான், ரஜினிகாந்த், பிரபாஸ் ஆகியோரது எந்தப் படமும் இத்தனை கோடி வசூல் குவிக்கவில்லை.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜூன் திகழ்கிறார். ஃபோர்ப்ஸ் இந்தியா அறிக்கையின்படி அல்லு அர்ஜூன் அதிக சம்பளம் வாங்குகிறார். புஷ்பா 2 படத்திற்காக ரூ.300 கோடி சம்பளம் பெற்ற அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.460 கோடி ஆகும்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய் 2ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் ஜன நாயகன் படத்திற்கு ரூ.275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு அதிக வசூல் குவித்த படமாக GOAT உலகளவில் ரூ.450 கோடி வரையில் வசூல் குவித்தது. இதே போன்று 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ ரூ.621 கோடி வரையில் வசூல் குவித்து அதிக வசூல் குவித்த படமாக சாதனை படைத்திருந்தது.
இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பது ஷாருக்கான். அவரது நடிப்பில் வெளியான டங்கி படத்திற்கு ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வேட்டையன், ஜெயிலர் போன்ற படங்களுக்கு ரூ.125 கோடி முதல் ரூ.270 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜூன் தனது 22ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று சொல்லப்படுகிறது. ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற வீடியோ வெளியாகியிருந்தது.
இந்தப் படத்திற்கு அல்லு அர்ஜூனுக்கு ரூ.175 கோடி சம்பளம் என்றும், படத்தின் லாபத்தில் ரூ.15 சதவிகிதம் என்றும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, அட்லீக்கு ரூ.100 கோடி சம்பளம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வரும் 2026 அல்லது 2027ஆம் ஆண்டுகளில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.