சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார்

 

இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களுக்கு மேல் வெற்றி படங்கள் தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் சுந்தர். சி யின் மவுசு மீண்டும் ஏறியுள்ளது.

தற்போது சுந்தர்.சி 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சுந்தர். சி சமீபத்தில் நடிகர் கார்த்தியை எதார்த்தமாக சந்தித்த வேளையில் கார்த்தியிடம் ஒரு புதிய படத்திற்கான கதையை கூறியிருந்தார். அந்த கதை கார்த்திக்கு பிடித்துபோக சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 

இந்த படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகிறது .இதன் படப்பிடிப்பிற்காக இவ்வருட டிசம்பர் மாதத்தில் துவங்கி அடுத்த வருட பிப்ரவரி மாதம் வரை கார்த்தி கால்ஷீட் தந்துள்ளதாக கூறப்படுகிறது.