டூரிஸ்ட் பேமிலி டிரெய்லர்

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லரை படக்குழு யூடியூப்பில் ரிலீஸ் செய்துள்ளது.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் இலங்கைத் தமிழராக நடித்திருக்கிறார். இலங்கையில் இருந்து தப்பி வந்த சசிகுமார் பேமிலி, தங்கள் அடையாளத்தை மறைத்து சென்னையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாக இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது. இதில் சசிகுமாரின் மகனாக நடித்துள்ள சிறுவன், காமெடியில் கலக்கி இருக்கிறார். 

சசிகுமார் இலங்கைத் தமிழனாகவே மாறி இருக்கிறார் என்பது டிரெய்லர் மூலமே தெரிகிறது. குடும்பங்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.