பிரபல நடிகர் 2 ஆவது திருமணம்

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். 'புன்னகை தேசம், வடுகபட்டி மாப்பிள்ளை, பிறகு, மந்திரன், ஜூனியர் சீனியர்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி, சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் 'கிழக்கு முகம், பூமணி' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 

கடந்த 2021ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாந்தி, அதிலிருந்து குணமாகியும் மூச்சு திணறல் பிரச்னையில் தொடர் சிகிச்சையில் இருந்து, பின்னர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஹம்சவர்தன், தற்போது 2வது திருமணம் செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த நிமிஷா என்பவரை கடந்த ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்துள்ளார். 

இந்த தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது. இதுப்பற்றி நாம் விசாரித்தபோது, 'ஏப்ரல் 30ல் திருமணம் முடிந்தது. நான் கேரளாவில் சினிமா, மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளேன். அவர்தான் முதலில் காதலை சொன்னார்' எனக் கூறினார் நிமிஷா.