சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய திரைப்படங்கள் மே 1ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு போட்டியாக சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே வசூலிலும் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக ரெட்ரோவை காட்டிலும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் எந்த படம் வசூலில் டாப்பில் உள்ளது என்பதை பார்க்கலாம்.
ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியா சற்று சறுக்கினாலும், வசூல் ரீதியாக கோடிகளை குவித்து வந்தது. இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், 3ம் நாளோடு ஒப்பிடுகையில் 4ம் நாளில் வசூலில் சற்று சரிவை சந்தித்து இருந்தது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் கமலேஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலிலும் நாளுக்கு நாள் பிக் அப் ஆகி வருகிறது.
அதன்படி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 3ம் நாளைக் காட்டிலும் 4ம் நாளில் 40 சதவீதம் அதிகம் வசூலித்துள்ளது. 3ம் நாள் 2.29 கோடி வசூலித்திருந்த இப்படம் 4ம் நாளில் 3.2 கோடி வசூலித்து இருந்தது. அதே வேளையில் ரெட்ரோ திரைப்படம் தமிழ்நாட்டில் 3ம் நாள் மற்றும் 4ம் நாள் 5.7 கோடி வசூலித்து இருந்தது. இனி அடுத்து வார நாட்கள் என்பதால் இரண்டு படங்களின் வசூலுமே சரிய வாய்ப்பு உள்ளது. அதிலும் டூரிஸ்ட் பேமிலி படத்தைக் காட்டிலும் ரெட்ரோ வசூல் கடுமையாக சரியும் என கூறப்படுகிறது.