இயக்குனர் வெங்கட் பிரபு 'தி கோட்' படத்திற்கு பிறகு அவர் அடுத்து இயக்கும் படத்திற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது.