பல முக்கிய பிரபலங்களின் கணக்குகள் முடக்கம்-அதிர்ச்சியில் நடிகைகள்..!

 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

 இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரின் சமூக வலைத்தள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

 

ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

 

இந்தியாவில் இவர்களை பின்தொடர்பவர்களால் அவர்களின் இன்ஸ்டா பக்கங்களை அணுக முடியவில்லை.

 

பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

 

முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயி் அக்தர் உடையது உட்பட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது குறிப்பிடத்தக்கது.