அவ வாய்ல நாத்தம் அடிக்கும் கழுவி ஊத்திய பிரபல நடிகை

 

தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து பல நடிகர்-நடிகைகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, கோலிவுட் திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி, 2018இல் ஆடைகளை கலைந்து போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்

அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், சினிமாவில் நடைபெறும் போதைப்பொருள் பார்ட்டிகள் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் கூற்றுப்படி, “போதைப்பொருள் பார்ட்டிகளில் நடிகர்கள் மட்டுமல்ல, முன்னணி நடிகைகளும் கலந்துகொள்கின்றனர். இந்த பார்ட்டிகளில் காதல் தோல்வி போன்ற தீவிரமான பேச்சுகளை தவிர்த்து, ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவார்கள். 

போதைப்பொருள் உட்கொண்டால் தொடர்ந்து சிரிப்பு வரும். ஆனால், அதிகளவு உட்கொள்ளும் நடிகைகள் மறுநாள் காலையில் கேவலமான நாற்றத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வார்கள். 

சில நடிகர்கள் இதைப் பற்றி பேசும்போது, ‘அவள் வாயில் நாற்றம் அடிக்கும், நன்றாக குடித்துவிட்டு வருகிறாள்’ என்று கூறுவார்கள்.” மேலும், நடிகைகள் தோல் பளபளப்பாக இருக்கவும், மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்யும் போது சோர்வு இல்லாமல் இருக்கவும், கண்களுக்கு கீழே கருவளையம் வராமல் இருக்கவும் போதைப்பொருளை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீரெட்டி, முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் நயன்தாரா இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதை கடுமையாக விமர்சித்தார். “அவர்களுக்கு பணமும் வணிகமும் மட்டுமே முக்கியம். 

ரசிகர்களுக்காகவாவது ஒரு ட்வீட் போடுவார்களா? மீ டூ இயக்கத்தின் போது நயன்தாரா ஒரு ட்வீட் கூட போடவில்லை. அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறீர்கள், ஆனால் பெண்களுக்கு ஆதரவாக அவர் பேசியதில்லை,” என்று கேள்வி எழுப்பினார். 

இந்த பேட்டி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை தூண்டியுள்ளது.