ஊருக்கே தெரியவரும் ஆனந்தியின் கர்ப்பம்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ




 சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அவரது அக்கா திருமணத்தை எப்படியாவது நடந்து முடித்துவிட வேண்டும் என இருக்கிறார். அதுவரை தனது கர்ப்பம் பற்றிய செய்தி யாருக்கும் தெரிய கூடாது என அவர் அனைவரிடமும் சொல்லி இருக்கிறார்.

ஆனந்தி அக்கா திருமணத்துக்கு அன்பு, மகேஷ் என எல்லோரும் வருகிறார்கள், ஆனால் ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்தது அன்புவின் அம்மா திடீரென வந்தது தான். ஆனந்தி - அன்பு திருமணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற தான் வந்திருப்பதாக நேரடியாகவே அவர் எல்லோரிடமும் கூறிவிட்டார்.


அதன் பின் திருமண நிகழ்ச்சியில் ஆனந்தி திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார். அவர் கையை பிடித்து பார்க்கும் பாட்டி அதிர்ச்சி ஆகிறார்.

ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை அவர் கூறினால் அந்த உண்மை மொத்த ஊருக்கே தெரியவந்துவிடும். அதனால் ஆனந்தியின் தோழிகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

ப்ரோமோவில் நீங்களே பாருங்க.