தமிழ்நாட்டில் நடிகைகளின் பெயரில் உணவு விற்கும் ஒரு டீக்கடையின் போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நயன்தாரா டீ, தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஆகியவை 5 ரூபாய் விலையில் விற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டர், ரசிகர்களிடையே கலகலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, குஷ்பு இட்லி 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் நிலைத்து நிற்கிறது, இன்னும் அதை மிஞ்சும் இட்லி எதுவும் வரவில்லை.
இந்த புதிய டீக்கடை போஸ்டரை பார்த்த ரசிகர்கள், “தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஓகே… ஆனால் நயன்தாரா டீ என்றால் என்ன? அதை எதில் போடுவீர்கள்?” என்று நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் இதை அச்சமூட்டும் வகையில் கேலியாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தமிழகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், அதன் வைரல் தன்மை காரணமாக பலரது கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் தெரிகிறது
இது போன்ற நடிகைகளின் பெயரில் உணவு வைக்கும் பழக்கம் பிற பகுதிகளிலும் உள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் சன்னி லியோன் சாப்ஸ், மியா கலிஃபா சாப்ஸ் என்று அசைவ உணவுகளுக்கு பெயரிடப்பட்டன.
அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் தீபிகா படுகோன் பெயரில் தோசை அறிமுகம் செய்யப்பட்டது. இவை அனைத்தும் சர்ச்சையையும், மவுஸ் ஜாஸ்தியையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் இந்த போஸ்டர் தொடர்ந்து வைரலாகி, நடிகைகளின் பெயரை பயன்படுத்தி வணிகம் செய்வதை பற்றி பல விவாதங்களை தூண்டியுள்ளது.