90களில் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மதுபாலா. தமிழில் ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார்.
உச்ச நட்சத்திரமாக இருந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சிறு இடைவேளை எடுத்த மதுபாலா, பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது, அவர் நடித்துள்ள கண்ணப்பா திரைப்படம், விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி, ஜூன் 27, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
“நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. இதனால் பல படங்களை நிராகரித்தேன். ஒரு படத்தில் முன்கூட்டியே தெரிவிக்காமல் உதட்டு முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்காக நீண்ட நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த காட்சியில் நடித்தது எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு, மதுபாலாவின் நேர்மையான பதிலுக்கு பாராட்டுகளை பெற்று வருகிறது. கண்ணப்பா படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதனால் மேலும் அதிகரித்துள்ளது.