மூத்த நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ‘புதிய சிந்தனை’ யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பேசினார்.
கிருஷ்ணா 13 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டதை அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ‘கோடு’ (குறியீட்டு வார்த்தைகள்) பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாகவும், கிருஷ்ணா சில செய்திகளை அழித்ததால் வசமாக மாட்டிக்கொண்டதாகவும் ரங்கநாதன் தெரிவித்தார்.
அவர், “நான் கொக்கைன் பயன்படுத்தவில்லை. எனக்கு ஆன்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுகிறேன்,” என்று கூறி, தன்னை இந்த விவகாரத்தில் இருந்து விலக்கினார்.
ஒரு கிராம் கொக்கைன் 12,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது என்றும், இது நரம்பு மண்டலத்தை தாக்கி, பசியை அடக்கி, உடல் எடையை குறைக்க உதவுவதால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதை பயன்படுத்துவதாகவும் விளக்கினார்.
இது உணவு தேவையை குறைத்து, மூன்று நாட்கள் சோர்வின்றி வேலை செய்ய உதவுவதாகவும், ஆனால் நீண்டகால பயன்பாடு மனநிலையை பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.
கேரளா மற்றும் பெங்களூரில் இந்த வியாபாரம் தொடர்பாக பெரிய அளவில் கைது நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து இந்த போதைப்பொருள் வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பார்ட்டிகளில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு சினிமாவில் பழக்கமாகிவிட்டதாகவும், ஆனால் அனைத்து நடிகர்களையும் இதற்கு குற்றவாளிகளாக கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
மட்டுமில்லாமல், சினிமாவில் ஆண், பெண் வேறுபாடே கிடையாது. அதிலும், இந்த போதை விவகாரத்தில் நடிகைகள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில், பட வாய்ப்புக்காக படத்திற்கு சம்பந்தமே இல்லாத, வயாதான நபர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளாவார்கள்.
அப்படி சங்கடமான நேரங்களில் கொக்*ன் பயன்படுத்தி விட்டு தன்னை மறந்த நிலையில் அங்கு செல்வார்கள். இன்னும் சில நடிகை கொக்**ன் அடிச்சா தான் படுக்கைக்கு சம்மதிப்பார்கள். தங்களை மறந்த நிலையில் இந்த தவறுகளை செய்ய சம்மதிக்கிறார்கள். இதெல்லாம், உச்சகட்ட விபரீதம்.
பிரபலங்களின் பெயர்களை தவிர்த்த அவர், “கூகுளில் கொக்கைன் பயன்பாட்டின் அறிகுறிகளை பாருங்கள், யார் மாட்டியிருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்,” என்று கூறி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.