பிரபல தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.
புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன் ,தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
மதன்பாபுவின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.