சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்


பிரபல இந்திய மலையாள நடிகரான கலாபவன் நவாஸ் விருந்தகம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

51 வயதான அவர் பல்குரல் கலைஞர், பின்னணிப் பாடகர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர். 

திரைப்பட படப்பிடிப்புக்காகக் கொச்சி அருகில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த நவாஸ், நேற்றுமுன்தினம் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்தியக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

இருப்பினும், நடிகரின் மரணத்திற்கான காரணம் குறித்து இந்திய சுகாதார அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

நவாஸின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.