கூலி திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியுடன் லோகேஷ் கைகோர்ப்பது இதுவே முதல் முறையாகும்.மேலும் இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். முன்னணி நடிகை பூஜா இப்படத்தில் மோனிகா எனும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.கூலி திரைப்படத்தின் முன் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் துவங்கிவிட்டன. இந்த ப்ரீ புக்கிங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை நடந்த முன் பதிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இதுவரை நடைபெற்ற வெளிநாட்டு முன் பதிவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கூலி திரைப்படம். கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் மாபெரும் வசூல் சாதனையை கூலி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home
cinebm
cinemanews
kooli
rajini
tamilcinema
கூலி பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா;வசூல் வேட்டையில் பட்டை கிளப்பும் ரஜினிகாந்த்