அடுத்த படத்தை இயக்குகிறார் ஷங்​கர்

பிரம்​மாண்ட இயக்​குநர் ஷங்​கர், சு.வெங்​கடேசன் எழு​திய ‘வேள்​பாரி’ நாவலைத் திரைப்​பட​மாக இயக்க இருக்​கிறார். அதற்​கான உரிமையை வாங்கியுள்ள அவர், இப்​படத்தை 3 பாக​மாக உருவாக்க இருப்​ப​தாக முந்​தைய பேட்​டிகளில் கூறி​யிருந்​தார்.

தற்​போதைய, தனது கனவு படம் என்​றும் அதை அவர் தெரிவித்திருந்​தார். அந்​தப் படத்​தின் ‘பிரி புரொடக் ஷன்’ பணிகளுக்கு ஒரு வருடம் ஆகும் என்று கூறப்​படு​கிறது. அதற்​கான வேலைகளை அவரும் அவருடைய டீமும் தொடங்​கி​யுள்​ளனர். அதற்கு முன் இளம் ஹீரோ நடிக்​கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

வழக்​க​மான அவருடைய பாணி​யில் இருந்து முற்​றி​லும் மாறு​பட்ட ஆக் ஷன் த்ரில்​லர் கதையை அவர் இயக்க இருக்கிறார். இதற்​காக 2 இளம் ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வரு​கிறது. இந்தப் படத்தை விரை​வாக முடிக்க அவர் திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும் விரை​வில் இப்​படம் பற்​றிய அறி​விப்​பு வெளி​யாகும்​ என்​றும்​ கூறப்படு​கிறது. 

Post a Comment