இயக்குனர் விக்னேஷ்சிவன் ஒரு காலத்தில் சிம்பு நண்பராக இருந்தார். பின்னர், கவர்ச்சி நடிகை சோனா ஆபீசில் வேலை செய்தார் என சொல்லப்படுவது உண்டு. சிம்பு பற்றி பேசியுள்ள விக்னேஷ்சிவன், சோனா பற்றி அதிகம் பேசியதில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்னேஷ்சிவன் பற்றி சோனா பேசியுள்ளார்.
அதில், ‛‛என் ஆபீசில் சில ஆண்டுகளாக விக்னேஷ்சிவன் பல வேலைகளை செய்து வந்தார். இப்போது அது பற்றி, அவர் பற்றி பேசுவது சரியாக இருக்காது. காரணம், நயன்தாரா. அவரும் என்னை போல ஒரு நடிகை. சினிமா துறையில் நிறைய அடி வாங்கி முன்னேறி இருக்கிறார். நல்ல குடும்பத்தை அமைத்து இருக்கிறார்.
அதனால், விக்னேஷ்சிவன் பற்றி பேசமாட்டேன். தவிர, அவன் கெட்டவன் இல்லை. என்னை மறந்துவிட்டான் என்ற ஆதங்கம் இருக்கிறது. சினிமாவில் பணத்தை இழந்தால் சில நாட்கள் அழுவேன். ஆனால், நண்பர்களை இழந்தால், துரோகங்களை சந்தித்தால் ரொம்பவே கஷ்டப்படுவேன். என் வாழ்க்கை வரலாறு வெப்சீரீஸ் ஆக வருகிறது. அதில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் இருக்காது. வேறு ஒரு கதை இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
