சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி ரெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் ஸ்வாதி ரெட்டி பைலட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
தற்போது திடீரென ஸ்வாதி 2ம் திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஸ்வாதி 2023ல் நடித்த Month of Madhu என்ற படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் நகோதி என்பவரை தான் காதலித்து இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.
அவர்கள் ஜோடியாக வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
