அன்று விஜய் கேட்ட ஒற்றை கேள்வி... அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திய நடிகை ரோஜா


 

நடிகை ரோஜா தான் ஏன் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தினேன் என்பதை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் தான் நடிகை ரோஜா. நீண்ட இடைவெளிக்கு பின்பு அன்பே டயானா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்தது குறித்து ரோஜா கூறுகையில், இப்படத்தில் அம்மாவாக நடித்துள்ளதாகவும், கதையின்படி சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பம் என்பதால் தெலுங்கு பேசி நடித்துள்ளேன்.

குறித்த கதையுடன் தன்னால் கனெக்ட் ஆக முடிந்தது என்றும் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் 12 ஆண்டுக்கு முன்பு விஜய்யின் காவலன் படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்திருந்தேன். அப்பொழுது விஜய் நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களா? என்று நம்பமுடியாமல் கேட்டுள்ளார். 

பின்பு சின்னத்திரை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார். தற்போது நடிக்க வந்துள்ளதாகவும், அடுத்ததாக லெனின் பாண்டியன் படத்திலும் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

ஆந்திர அரசியலில் நான் வெற்றி பெற்றதற்கு காரணமே சினிமா தான் என்றும் இனி நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.


Post a Comment