மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரை நோக்கி நகைச்சுவையாகப் பேசியது தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தான் நடித்துள்ள விசிட்டர் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன்,
“நாங்கள் (நவ்யா நாயர்) நீண்ட காலத்திற்குப்
பிறகு ஒரு படத்திற்காக இணைகிறோம். நவ்யாவுக்கு இப்போது திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். அப்படியிருந்தும், நான்
முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, நவ்யா கண்ணீருடன் புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்” எனப் பேசியிருந்தார்.
