பிக்பாஸ் 10ல் அடுத்த அதிர்ச்சி - அடுத்தடுத்து வெளியேறிய போட்டியாளர்கள்?


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10ஆவது சீசன், கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

105 நாட்கள் நடைபெற உள்ள இந்த சீசன், இரசிகர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவதால், பிக்பாஸ் இரசிகர்களும் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கவனித்து வருகின்றனர்.

இந்த சீசனில் சின்னத்திரை மற்றும் திரையுலகில் பிரபலமான பலரும் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இதற்கிடையில், சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான பிளாக் பாண்டி, உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்பவம் சக போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிளாக் பாண்டி வெளியேறியபோது, சக போட்டியாளர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் 10ஆவது சீசனில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து சவின்யா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென சவின்யா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அவர் எதற்காக வெளியேறினார்? உடல்நலக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிக்பாஸ் 10ஆவது சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே அடுத்தடுத்து போட்டியாளர்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருவது, இந்த சீசன் ஆரம்பத்திலேயே பரபரப்பாக மாறியிருப்பதை காட்டுகிறது.

Post a Comment