காசு, பணம் வேண்டாம்". என் கணவன் மூலமா ஒரு குழந்தை பெத்துக்கிட்டா போதும். விவாகரத்து வழக்கில் மனைவியின் வினோத கோரிக்கை. தீர்ப்பு என்ன தெரியுமா.??


Maharashtra - மாநிலம் நாந்தேட் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு ஒன்றில், கணவரிடம் இழப்பீட்டுத் தொகைக்கு பதிலாக "மீண்டும் ஒருமுறை தாய்மையடைய அனுமதிக்க வேண்டும்" என மனைவி கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதி இருவரும் மருத்துவர்கள். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.

 பொதுவாக விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் அல்லது சொத்துக்களில் பங்கு கோருவதே வழக்கமாக இருக்கும். 

ஆனால், இந்த வழக்கில் அந்த பெண் மருத்துவர் விடுத்த கோரிக்கை நீதிபதியையே வியப்பில் ஆழ்த்தியது.

நீதிமன்றத்தில் அந்தப் பெண் வாதாடுகையில், "எனது கணவரிடம் இருந்து எனக்குப் பணம், காசு எதுவும் தேவையில்லை. 

ஆனால் விவாகரத்து பெறுவதற்கு முன்னால் நான் மீண்டும் ஒருமுறை கர்ப்பமடைய விரும்புகிறேன். 

ஏற்கனவே எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. 

அந்தக் குழந்தைக்கு ஒரு உடன்பிறப்பு வேண்டும் என்பதே எனது ஆசை," என்று தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கையைக் கேட்டவுடன் நீதிமன்ற அறையில் சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.

 மேலும், பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தையின் முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், கணவரிடம் இருந்து எவ்வித உதவியும் எதிர்பார்க்க மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்ணின் விருப்பத்தை ஏற்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினார். அதன்படி, அந்தப் பெண் IVF (In-Vitro Fertilization) தொழில்நுட்பம் மூலம் தாய்மையடைய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

உடல் ரீதியான உறவு இன்றி, கணவரின் விந்தணுக்களைப் பயன்படுத்தி ஆய்வக முறையில் கருத்தரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

இதற்கான மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அந்தப் பெண்ணே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவாகரத்து பெறுவதற்கு முன்பு ஒரு பெண் தனது குடும்பத்தை நிறைவு செய்ய விரும்பினால், அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. 

இந்த நடைமுறைகள் முடிந்த பின்னரே தம்பதியினருக்கு முறைப்படி விவாகரத்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், "ஒரு தாயின் உணர்வுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சோளிங்கா் அருகே தம்பதி தற்கொலை


இடுகாட்டில் தம்பதி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

சோளிங்கரை அடுத்த நீலகண்டராயபுரம் கிராம இடுகாட்டில் உள்ள மரத்தில் ஒரு ஆண், பெண் என இருவா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சோளிங்கா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் இருவரும் தம்பதி என்பதும் நீலகண்டராயபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா(45) மற்றும் அவரது மனைவி சுகன்யா(40) என்பதும் தெரியவந்தது. இவா்களுக்கு 19 வயதில் கல்லூரியில் ும் பெண், 17 வயதில் பிளஸ் 2 ும் ஒரு பெண் என இரு பெண் பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது.

சுகன்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் வேதனை தாளாமல் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!



நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.

விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர். 

ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர்.

இந்நிலையில்,தளபதி விஜயின் ரசிகையொருவர் விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சை குறித்து காரசாரமாக பேசிய காணொளியை, சினிமா விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பெண் அதில் குறிப்பிடுகையில், தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சட்டம் சொல்வது என்ன?

 


விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இதன்படி சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் தாக்கல் செய்துள்ளார்.

சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளார். நடிகர் விஜய் சஙீதாவை 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை எக்மோர் ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்திய டகாலத்தில் இருந்து விஜய் பல சர்ச்சைகளில் மாட்டி உள்ளார். இந்த நிலையில் சங்கிதா டிசம்பரில் தாக்கல் செய்த மனு ்தற்போது எப்படியே வெளியாகி மக்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றது.

சங்கீதா 12 பக்க மனுவில் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குடும்ப விடயம் என்பதால் இதை சமூக வலைத்தளத்திற்கு கொண்டு போக கூடாது என்றும் மூடப்பட்ட அறையில் தான் விசாரணை நடக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

1954 சட்டத்தின் பிரிவு 27ன் கீழ் திருமண வாழ்வில் துரோகம் இழைத்தல், கட்டிய மனைவியை கைவிடுதல், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய திருமணச் சட்டத்தின் பிரிவு 27 (1) (b) படி, கணவன் அல்லது மனைவி ஒருவரை ஒருவர் உடல் அல்லது மன ரீதியாக கொடுமைப்படுத்தினால் அது விவாகரத்துக்கான காரணமாக கருதப்படும்.

அடித்தல், காயப்படுத்துதல், திட்டுதல், அவமானப்படுத்துதல், தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்தல், குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்துதல் போன்ற செயல்கள் “கொடுமை” எனப் பார்க்கப்படும்.


இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.


இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் மனுவில் குறிப்பிட்டு சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

திரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்

 


நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், சங்கீதா குறிப்பிடும் நடிகை த்ரிஷா தான் என இணையத்தில் வேகமான கருத்துக்கள் வலம் வருகின்றது.இந்நிலையில், பாடகி சுசித்ரா குறிப்பிட்டுள்ள விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

 மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார்

நடிகர் விஜய் முற்றிலும் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுவருகின்றார்.

 இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள விடயம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், குறித்த நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும் என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாடகி சுசித்ரா இது குறித்து பிரபல ஊடகத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில், த்ரிஷாவின் காதல் விஜயுடன் கிடையாது.

 விஜய் வேண்டுமானால் த்ரிஷாவை காதலிக்கலாம் ஆனால் த்ரிஷா காதலிப்பது தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆன,உதயநிதி ஸ்டாலினை தான் என புதிய புயலை கிளப்பியுள்ளார்.

த்ரிஷா மற்றும் உதயநிதி ஸ்டாலின் காதல் அமர காதல் இவர்கள் இருவரும் திருமணத்தையெல்லாம் தாண்டிய காதல் உறவில் இருப்பதாக பகிரங்கமாக பேசிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பாபநாசம் பட குட்டி பொண்ணா இது?

 


தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை எஸ்தர் அணில் செம ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கொள்ளை அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் எஸ்தர் அணில்.

இந்த திரைப்படத்தில் கமலில் இழைய பெண்ணாக நடித்த இவரின் தத்ரூபமான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.












திருமணத்திற்கு பின் ரசிகர்களுக்கு மத்தியில் ஜோடியாக ராஷ்மிகா

 

திருமணத்திற்கு பின்னர் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் வலம்வந்துள்ளார். 

ஆம், இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் நேற்றைய தினம் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமணம் முடிந்த கையோடு திருமண புகைப்படங்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தங்களின் மகிழ்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக வெளியுலகில் தலைக்காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.



திருமணத்தின் பின்னர் இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த இவர்கள், காரில் இருந்து இறங்கி ஜோடியாக கைகோர்த்து தங்களது ரசிகர்களுக்கு Flying கிஸ் கொடுத்து தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை...


ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டதாக பிரபல நடிகை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தனது ஆசையை தற்போது வெளியே ஓபனாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1987ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை மோகினி.

பின்பு ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து பிரபலமான இவர், நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன் என பல படங்களில் நடித்துள்ளார்.

2007ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தில் நடித்த அவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மலையாள படமான கலெக்டர் என்ற படத்தில் 2011ம் ஆண்டு நடித்திருந்தார். இவரது கண்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகையுடன் தொடர்பு... விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா மனு தாக்கல்

 



நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை!

 


பிக்பாஸ் புகழ் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது காதலன் விஷ்ணுவோடு, நடுவீதியில் குரங்குகளுக்கு உணவு கொடுத்து ஜாலியாக விளைாயடி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நடிகைகளின் ஆபாச படங்கள் தொடர்பில் சற்று முன் பிரபல நடிகை பகீர்

 


தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடி கையாக கவர்ந்து வருகிறார், அனுபமா பரமேஸ் வரன். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த 'பைசன்' படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கிடையில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் வெளியாவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுகிறார்கள்.

 இதுபோன்ற விஷம ஆசாமிகளை களையெடுக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற கூடாது. 

இதுபோன்ற கேடுகெட்ட சிந்தனையாளர்கள் தண்டிக்கப்பட்டால் தான், இந்த கேவலமான விஷயங்கள் ஒழிக்கப்படும்" என்று ஆவேசம் தெரிவித்துள்ளார்.

வசூல் எவ்வளவு தெரியுமா?

 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். 

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும், நடிகை மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2016ல் வெளிவந்த தெறி படம் உலகளவில் ரூ. 150+ கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்கள் என்னென்ன.. முழு லிஸ்ட் இதோ

 


ஓடிடியில் வாரம்தோறும் என்ன புது படம் வர போகிறது என ரசிகர்கள் தற்போதெல்லாம் தீவிரமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் முக்கிய ஓடிடி தளங்களில் என்ன புது படங்கள் வரப்போகிறது என்கிற பட்டியலை பார்க்கலாம்.

அமேசான் ப்ரைம்

The Bluff - பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் இந்த படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அமேசானில் ரிலீஸ் ஆகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார்

Secret Stories: Roslin - மீனா நடித்து இருக்கும் இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 27ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நெட்பிலிக்ஸ்

Accused படம்: Konkona Sensharma நடிப்பில் இந்த படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் பிப்ரவரி 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.  

தடயம் 

சமுத்திரக்கனி நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் ஜீ தமிழில் பிப்ரவரி 27ல் ரிலீஸ் ஆகிறது.

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையானேன், நடக்க முடியாமல்... அதிர்ச்சி தகவலை கூறிய நடிகை சினேகா

 




தனது சிரிப்பின் அழகில் மக்களை மயக்கும் நடிகை தான் சினேகா.

புன்னகை அரசியாக மக்களால் கொண்டாடப்படும் இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். டாப்பில் இருந்த போதே சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், குழந்தைகள் கொஞ்சம் வளர மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் நடிகை சினேகா. அதேசமயம், படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.  

சினிமாவை தாண்டி சொந்தமாக புடவை கடை திறந்து அதிலும் சாதனை செய்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு விருது மேடையில் நடிகை சினேகா ஒரு ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.

அதில் அவர், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் 3 வருடத்திலேயே ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டு விட்டது, நான் எழுந்து நடக்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகும் என சொன்னார்கள்.

அந்த நேரம் கரு.பழனியப்பன், பார்த்திபன் கனவு பட கதையை கூறினார், நான் நடக்கவே முடியாமல் இருக்கிறேன், எந்த நம்பிக்கையில் கதை கூறுகிறீர்கள் என்றேன். அவர் உடனே அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடுந்துடுவீங்க என்றார்.

அவர் கொடுத்த தைரியம் தான் என்னை அன்று நடக்க வைத்தது என கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்..

 


விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் பேசுபொருளாகியுள்ளது. இவர்களுடைய திருமணம் இன்று உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஷ்மிகா - விஜய் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.


மேலும் வெளிவந்த தகவலின்படி, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது.

சரிகமப சங்கமம்.. 10 வருட கொண்டாட்டம்! இந்த வார ப்ரோமோ

 

ஜீ தமிழின் சரிகமப Li'l Champs Season 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு விஷயம் நடக்க இருகிறது.

சரிகமப ஷோ 10 வருடங்களை நிறைவு செய்வதால் அதை கொண்டாடும் விதமாக போட்டியாளர்களின் சங்கமம் நடக்கிறது.

வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.